உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மன்னிக்கத் தெரியாதவர் முடுக்கெல்லாம் எட்டிப் பாய்ந்துள்ள இந்தக் காலத்தில் பட்டிக்காட்டுப் பெண் என்று வெறுக்கப்படும் நிலையில் எத்தப் பெண்ணும் இருப்பதில்லை. அவளுக்குப் படிக்கத் தெரியுமோ தெரியாதோ, ஸ்டைலாக டிரஸ் பண்ணத் தெரியும். பவுடர் பூசிக்கொள்ளத் தெரியும். அகல ரிப்பன் வைத்து நாகரிகமாகப் பின்னிவிடவும், ரிங் வைத்து பின்னிக் கொண்டை போடவும், குதிரைவால் க ட் டு கட்டிக் கொள்ன்வும் தெரியும். நவ யுகத் தயாரிப்பான மினுமினுத் துணிகளையும் தாகரிக டிசைன் ஜாக்கெட்டுகளையும் அணிந்து தளுக்கிக் குலுக்கி நடக்கத் தெரியும். சுந்தரமும் இந்த ரகமான பெண்தான். அவளை முழு நாகரிகக் கனி என்று சொல்லமுடியாது. நவ யுகக் காய்வெட்டு’ எனச் சொல்ல ன்ாம். அவள் தன் துணைவியாக வந்து சேர்ந்ததும், சுப்பிர மணியனுக்கு வாழ்க்கை பேரானந்தமாக மாறியது. அவன் சூழ்நிலையை, உலக சம்பிரதாயங்களை மறந்தான். தன்னையே மறந்து திரிந்தான். - - சுந்து, உனக்குப் பாவாடை தாவணி எடுப்பாக, ஜோராக இருக்கும்! என்று சொல்வி, வாங்கித் தந்து, அவளேப் பாவாடை அழகியாக நடமாடவிட்டுக் கண்டு களித்தான். அண்டை அயலார் சிரித்தனர். பழித்தனர். புறம்பேசி மகிழ்த்தனர். அவளேக் குறைகூறினர். அவர் சொல்கிறபடி கேட்டு, அவருக்குப் பிடித்ததைச் செய்வது குற்றமா?’ என்று கேட்டாள் பத்தினித் தங்கம்.' முன்னேர்கள், பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிருர் கள், கணவனைக் கடவுளாக மதித்து நடக்கவேண்டும் என்று. ஆஞல், நடைமுறையில் கணவன் பிரியப்படி நடந்தால், கணவனுக்கு மகிழ்வூட்டும் விதத்தில் ஆடை அலங்காரங்கள் செய்துகொண்டு சந்தோஷமாகக் காட்சி அளித்தால், பெரியவர்களே குறைகூறுகிருர்கள். இது அம்மாள் சுந்தரத் துக்குப் புரியவில்லை. புரியாத விஷயங்கள் குறித்து அவள்