உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔬8 மன்னிக்கத் தெரியாதவர் அதிகம். அவனுக்குப் பதினறு வயசு ஆகுதுன்னு மதனி சொன்னுளே. சில பையனுக இந்த வயசுக்குள்ளே என் னெல்லாம் பண்ணிப்போடுதானுக! இவன் சுபாவம் இப்படி இருக்கு!’ என்று எண்ணிக்கொண்டாள் அவள். “அடுத்த வீட்டு அத்தை'யின் சிறு குறும்பு, படிப்பில் ஆர்வம் கொண்டிருந்த சேதுராமனின் மனநிலையை மிகுதியும் . கெடுத்துவிட்டது. அவள் விளையாடிவிட்டுப் போன பின்னர், அவளைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்த அவன் மீண்டும் அவள் திரும்புகிற வரை வெளியே போகாமல் வீட்டிலேயே காத் திருந்தான். வரும்போதும் சுந்தரம் எட்டிப்பார்த்து ஏதாவது சொல்லுவாளா என்று பார்க்க வேண்டும் என்று நினைத் தான். -- ஆளுல் அவள் வீடு திரும்பியபோது நேரே தன் வீட்டுக்குப் போய்விட்டாள். மதனி வீட்டுப் பக்கம் திரும்டவேயில்லை. . அது அவனுக்கு ஏமாற்றம் அளித்தது. அம்மாவும், வளைவில் வேறு பலரும் அங்குமிங்கும் நடமாடிக்கொண் டிருந்ததஞல் தான் அவள் அவ்வாறு போய்விட்டாள் என்று அவன் தனக்குத்தானே ஆறுதல் கூறிப் பொழுது போக் கின்ை. அதிலிருந்து, அவள் எப்பொழுது வருவாள், திரும்பவும் தன்னுடன் பேசிச் சிரித்து விளையாடமாட்டாளா என்று அவன் ஆசையோடு எதிர்பார்க்கத் தொடங்கினன். శిత్రాత, அவள் வரவே இல்லை. - படிப்பில் மனம் செல்லாமலும், அவள் வரவில்லையே என ஏங்கியும் சில நாட்களைக் கழித்த பிறகு, சனியன் தொலையட்டும். பரீட்சைக்குப் படிக்க வேண்டியது தான் இனிமேலே என்று தீர்மானித்தான் சேது. - s