பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் பெண் 1 9 அப்படி ஒரு முடிவுக்கு அவன் வந்திருந்த வேளையில், சுந்தரத்தின் மனம் அவனுடன் கொஞ்சம் விளையாடி மகிழ லாமே என்று நினைத்துவிட்டது. - - சேதுராமனும் பாலுவும் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவளும் புத்தகத்தை எடுத்து வந்து, இதுக்கு அர்த்தம் என்ன? இதை எப்படிப் படிக்கணும்? இது எனக்குத் தெரியலியே; கொஞ்சம் சொல்லித்தர மாட்டியா?* என்று தொல்லை தரத் துணிந்தாள். அவர்கள் எரிந்து விழுந் தால், அவள் சிரித்துக் கேலிபேசி மகிழ்ச்சி அடைவாள். ஒரு சமயம் அவள் தானகவே என்னவோ எண்ணி ரசித்துக் களிப்பவள்போல் சிரித்துக்கொண்டே வந்தாள். அப்போது பாலு வீட்டில் இல்லை. அவன் அம்மா கோயி லுக்குப் போயிருந்தாள். அன்று கோயிலில் ஏதோ விசேஷம் என்று பலரும் சென்றிருந்தனர். சே து ரா ம ன் ஒரு பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தான். ஒரு நோட்டுடன் வந்த சுந்தரம், சேது, இந்த போட்டோவை நீ இன்னும் பார்க்கலியே? எல்லாரும் பார்த்தாச்சு. ஒரு மாப்பிள்ளை படம். எப்படி இருக்காருன்னு பார்த்துச் சொல்லு!’ என்று கூறி ஒரு படத்தை நோட்டுக் குள்ளிருந்து எடுத்துக் கொடுத்தாள். அவன் அதை வாங்கிப் பார்த்தான். அவள் படம்தான். அது. ஆனல் ஆண்பிள்ளை வேஷம் போட்டிருந்தாள். வேட்டி கட்டி, சட்டையும் கோட்டும் அணிந்து, அங்கவஸ்திரம் தோளுக்கு இருபக்கமும் நீண்டு தொங்க, தலையில் ஒரு குல்லாய் வைத்துக்கொண்டு, ஒரு நாற்காலியில் கால் மீது கால் போட்டபடி ஜம்மென்று அமர்ந்திருந்தாள். அவன் அதையே பார்த்துக்கொண்டிருக்கையில், அவள் அவன் அருகில் நெருங்கிக் குனிந்து, என்ன சேது, ஒரே' அடியா லயிச்சுப்போயிட்டே? இந்த மாப்பிள்ளையின் அழகு உன்னைக் கிறங்க வைக்குதாக்கும்? நாம ஒரு பொண்ணுக இல்லையே, இவரை லவ் பண்ண முடியாமல் போச்சேன்னு இப்போ என்று வருத்தம் ஏற்படுது போலிருக்கு ஐயோ