மன்னிக்கத் தெரியாதவர் “மன்னிப்பு என்பே த மகராஜபிள்ளை அகராதியில் கிடையாது!’ . - இப்படி அடிக்கடி உறுதியான குரலில் அறிவிப்பார் மகராஜபிள்ளை. அவர் பெரிய மனிதர். உருவம், அந்தஸ்து, செயல், தோரன முதலிய சகல அம்சங்களிலும்தான். மன்னித்தால், பலரும் திரும்பத் திரும்பக் குற்றம் செய்து கொண்டேயிருப்பார்கள், முதல் தடவையே சரியான படி புத்தி கற்பித்துவிட்டால் ஒழுங்காக வழிக்கு வந்துவிடு வார்கள். அடி உதை உதவுகிறமாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்னு சும்மாவா சொல்லியிருக்கிருங்க?" என்று வேறு விளக்கம் கூறுவார் அவர். 'குற்றம் செய்வது மனித சுபாவம். குற்றமே செய்யாமல் யாரும் இருந்துவிட முடியாது. மன்னிப்பது பெருந்தன்மை. மன்னிப்பது தெய்வத்தன்மை பெற்றது என்று கூடத்தான் சொல்லிவைத்திருக்கிரு.ர்கள் என்று ஒருசிலர் பிள்ளை அவர் களோடு வாயாடிப் பார்த்ததும் உண்டு. அப்போதெல்லாம் அவர் அலட்சியமாக ஒரு சிரிப்பைச் சிதறுவார். மகராஜபிள்ளையும் மனிதன்தான். அவர் தேவனே, தேவகுமாரனே அல்ல. சிறுமைச் செயல்கள் புரிகிற மனிதர்களுக்கு, அவர்களுக்குப் புரிகிற வழிவகை களிலேயே பாடங்கற்பித்து, அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வதுதான் என்னுடைய நோக்கம்’ என்று, பிறர் வாயடைத்துப் போகும்படி பேசுவார். அவரிடம் யார் என்ன சொன்னுலும் பேச்சு எடுபடாது. இதை அவருக்கு வேண்டியவர்கள், தெரிந்தவர்கள், சொந்தக் காரர்கள், ஊர்க்காரர்கள் எல்லோருமே அனுபவபூர்வமாக
பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/42
Appearance