பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烹参 மன்னிக்கத் தெரியாதவர் அறிந்துகொண்டிருந்தார்கள். அதற்காக அவர்மீது அவர்கள் வருத்தமோ கோபமோ கொள்வதும் இல்லை. மாருக, பிள்ளை அவர்களிடம் மற்றவர்களுக்கிருந்த மதிப்பும் மரியாதையும், ஒருவித பயமும் பக்தியும்தான் அதிகரித்து வந்தன. "நம்ம ஊருக்கு மகராஜபிள்ளை மாதிரி ஒரு ஆளு. வேண்டியதுதான். இல்லேன்னு சொன்ன, ஊரு ஊராக இருக்காது. முரட்டுப்பயலுகளும் போக்கிரிகளும் எத்துவாளிப் பயலுகளும் நம்ம எல்லார் தலையிலும் மிளகு அரைச்சு, ஊரைச்சுருட்டி விழுங்கிப் போடுவானுக! என்று. சிலபேர் பெருமையாகப் பேசிக்கொள்வதும் உண்டு. "மகராஜபிள்ளை போலீஸ்லே சேர்ந்திருக்க வேண்டிய ஆளு. அவரு மீசையும் உருட்டி முழிக்கிற கண்களும் அவர் வளர்த்தியும்-இதுகளைப் பார்த்ததுமே அரண்டு போயிரு வானுகளே குத்தம் செய்தவனுக. அவர் அதட்டல் போட்டாலே போதும். நடுங்கிச் செத்துப்போவான் திருடன், அப்புறம் இருக்கவே இருக்கு, அடி உதை, தூணிலே புடிச்சுக் கட்டு என்கிறதெல்லாம். அவரு ைட ய திறமைக்கும் மிடுக்குக்கும், அவருபோலீஸ் இலாகாவிலே பெரிய பதவியை சுலபமா எட்டிப்பிடிச்சிர முடியும் என்று சில தம்பியா பிள்ளைகள் அந்த அண்ணுச்சியின் புரவோலத்தைப் புலம்பி மகிழ்வார்கள். அதைத் தொடர்ந்து, உங்களுக்கு நினைவிருக்குதா? அந்தத் திருட்டிலே அப்படித்தானே நடந்துது? இந்தத் தீ வைப்புக் கேஸ்லே அவுக என்ன செய்தாக தெரியாது?’ என்ற ரீதியில் சுவையான விஷயங்கள் அடிபடும். அவர்கள் மறக்கமுடியாத-யாருமே மறக்க விரும்பாதமுக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தெற்குத் தெரு வேலுப்பிள்ளை வீட்டில் களவுபோன சங்கதி. .w. ... - அது நடந்து எத்தனையோ வருஷங்கள் ஒடி மறைந் திருந்தன. என்ருலும், இப்போதுதான் நிகழ்ந்ததுபோல பலருக்கும் நினைவில் நின்றது. - -