盛剑 மன்னிக்கத் தெரியாதவர் அது ஒரு காலம். அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவர் வீட்டு அம்மியையும் உடைக்கும் என்று சொல்லுவார்கள். அதிகாரத்துக்கும், அந்தஸ்துக்கும், குலப்பெருமைக்கும், பனத்துக்கும் அப்படித் தனி மதிப்பும், விசேஷ சலுகைகளும் இருந்த காலம் அது. மக்கள் மத்தியில் பயமும், அறிவின்மையும், அடிமைப் புத்தியும், பெரியதனத்தை-அதிகாரத்தை-தடலடித்தனத் தைக் கண்டு பணிந்து போகிற சுபாவமும் இயல்புகளாக வேரூன்றியிருந்த காலம் அது. போலீஸ் இலாகாவினர் மட்டுமல்லாது, சர்க்கார் உத்தியோகஸ்தர் எவருமே, சின்னஞ்சிறு ஊர்களில் கப்சிப் தர்பார் நடத்தி, தன் சித்தம்போல் காரியங்களைச் செய்து, "செபம் செயம், என்று போட்டு அடிக்கும்படியான, சூழ்நிலை வாய்த்திருந்த காலம் அது. சர்க்கார் அதிகாரியாக இல்லாதுபோயினும், அதிகாரம் பெற்ற சிலரைக் கைக்குள் போட்டுக்கொண்டு பணப் பெருமை, குடிப்பெருமை, ஆள் முறுக்கு முதலிய மூல பலங்க ளோடு, ஒரு சிலர் ஒவ்வொரு ஊரிலும் சர்வாதிகார ஆட்சி புரிவதற்கு வசதி இருந்த காலம் அது. - - புதுக்குடி என்ற சிற்றுாரில் அந்த ஸ்தானத்தை வகித்து வந்தவர் மகராஜபிள்ளை. - அவர் சர்க்கார் வேலை எதுவும் பார்க்கவில்லை. ஆனல் அதிகாரிகள் பலரும் அவருக்கு வேண்டியவர்கள். அவர் பெரியவீட்டுப் பெரியபிள்ளை. சொத்தும் சுகமும் இருந்தன. அவர் குரல் எடுபட்டது. அவர் அதிகாரம் செல்லுபடியா யிற்று. அவரைப்போன்ற ஒரு நபர் அந்த ஊருக்குத் தேவை யாகத்தானிருந்தது. சில சந்தர்ப்பங்களில் அவருடைய நியாயத்தீர்ப்பும் தண்டனையும் ரொம்பவும் பூர்வீகமானதாக, அநாகரிகமான தாகக்கூடத் தோன்றும். இருந்தாலும் அவற்றை ஜனங்கள்
பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/49
Appearance