பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்கலைக் கழகம் 19 மலை அசைந்தாலும் நிலை குலையாத வீரர். அவர் கருமத்தை எண்ணித் துணியும் இயல்பினர்; துணிந்தபின் அதனை மீண்டும் எண்ணிப் பார்த்து இழுக்குறும் இயல்பினர் அல்லர்) (அந்த எண்ணம் உருவாவிதற்கு உரிய வழி அவருக்கு 1896-இல் தோற்றிற்று. தோற்றுதற்குக் காரணம் அவர் சிறு வயதில் ஓர் உருவச் சிலையைப் பார்த்தமை. அந்த உருவம் ஆப்பிரிக்க நீக்ரோவர் ஒருவர் துயரம் தேக்கிய முகத்தொடும் கரு நிறத் தொடும் காணப்பட்ட வடிவம். அந்த நீக்ரோவர் உருவத்தைப் பார்த்தவுடன் சுவைட்சருக்குக் கழி பேர் இரக்கம் உண்டாயிற்று. அந்த உருவச் சிலையை அவர் முதல்முதல் கண்டது கால்மர் (Colmar) என்ற இடத்தில் அமைந்திருந்த உருவத் தொகுப்பில் என்பார்கள். کدام அவ்வுருவத்தினைச் சுவைட்சர் காண நேர்ந் தமை ஒரு வியப்பான செய்தியாகும். சுவைட் சருடைய வளர்ப்புத் தாயார் ஒரு நாள் சிறுவன் ஒருவனுடன் அவரை விளையாடப் போகவிட்டார். ஆற்றிற்குப் போகக்கூடாது என்றும், சிறப்பாகப் படகிற் செல்லக்கூடாது என்றும் பணித்து அனுப் பினர் அவர். அவ்வாறு இருந்தும், பல குறுந் தெருக்களின் வழியே அச்சிறுவ்ன் சுவைட்சரை அழைத்துக் கொண்டுபோய், கடைசியில் ஆற்றுப் பக்கம் போய்ச் சேர்ந்தான். படகோட்டியின் ஒவியத்தைக் கண்டு முன்னர் மகிழ்ந்திருந்த சுவைட்சருக்கு, படகோட்டி ஆகவேண்டும் என்ற எண்ணம் முன்னரே பெற்றிருந்த சுவைட்சருக்கு,