பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பல்கலைக் கழகம் ஆற்றிற் படகு செல்லுங் காட்சி இனிமை தந்தது. பொருத்தமே. சுவைட்சரின் தாயார் படகோட்டி யின் வேலே எவ்வளவு கடினமானது என்பதை எடுத்துக் காட்டி, அவரை அவ்வெண்ணங் கொள் ாைமல் தடுப்பதற்கு முன்னர்ப் பல முறை முயன் றுள்ளார். இப்பொழுதோ, உடன் வந்த தோழன் ஒரு படகினை அவிழ்த்துக்கொண்டு அதனிற் செல்லலாம் என்று சொல்லியபொழுது, முதலிற் சுவைட்சர் மறுத்தார் ஆயினும், முடிவில் அத் தோழனெடு புறப்பட்டுவிட்டார். அவன் துடுப்பை இயக்கி அப்படகினைச் செலுத்தத் தலைப்பட்டான். இருமருங்கிலும் வளர்ந்து கிடந்த மரங்களின் கீழ்ப் படகு இனிமையாகச் செல்லத் தலைப்பட்டது. அந்தப் படகிற் சென்றதால்தான் ஆப்பிரிக்க நீக்ரோவருடைய அவ்வுருவச் சிலையைச்சுவைட்சர் பார்க்க நேரிட்டது. அதைக் கண்ட காரணத்தால் தான் நீக்ரோ மக்களுக்குத் தாம் எவ்விதத்திலாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்க்கு உண்டாக, அவர் தமது முப்பதாவது வயதில் ஆப்பிரிக்காவிற்குச்சென்று நீக்ரோ மக்களிடையே வாழத் தொடங்கி, அவர்களுக்காக உழைக்க முன் வந்தார். 1905-இல் நீக்ரோ மக்கள் பெருநோய்களிளுல் இறந்துபடுகிருர்கள் என்ற செய்தியை ஒரு பத்திரிகை வாயிலாக அவர் அறிந்துகொண்டார். அதனல், 1906-ஆம் ஆண்டில் ஸ்டிராஸ்பர்கு பல் கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் ஒரு மாணவனுக அவர் சேர்ந்துவிட்டார். அவ்வுலகமே