பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்கலைக் கழகம் 21 அவர்க்கு வேருெரு உலகமாகத் தோற்றிற்று. மருத்துவக் கல்லூரியிற் சில வகுப்புக்களிலிருந்து அவர் திரும்பும்பொழுது களைத்து அலுத்துச் சோர்வுற்றுத் திரும்பியதுண்டு. எனினும், தம் சோர்வினை ஒதுக்கி வைத்துக்கொண்டு, இடை யிடையே இசைப் பயிற்சியால் அதனை அகற்றிக் கொண்டார். மருத்துவத் துறையில் ஏழாண்டு அவர் பயின்ருர். இடையிடையே, இசையும் சமயக் கல்வியும் பயிலுதற்கு வாய்ப்புக்களை அவர் எவ்வாருே அமைத்துக்கொண்டார். இடையில், 1912-இல், அர்ச். நிக்கலஸ் கோயிலிற் போதகராக வும் ஆசிரியராகவும் குறைநேரம் வேலை செய்வார் ஆயினர். இடையில், அவர் எழுதிய சில புத்தகங்கள் விற்கத் தொடங்கின. அவர் ஏறிய இசையரங்கு களில் வெற்றி உண்டாயிற்று. புத்தகங்கள் வாயி லாகவும், இசையரங்குகள் வாயிலாகவும், விரிவுரை கள் வாயிலாகவும் மருத்துவச்சாலை நடத்துதற்கு இரண்டு ஆண்டிற்குரிய பணம் கிட்டிற்று. சுவைட் சர் ஆப்பிரிக்காவிற்கு மருந்துகளைப் பெட்டியிலும், தங்கத்தைக் கையிலும் கொண்டுபோகக் கருதிஞர். ஒருவேளை, போர் மூண்டால் வங்கிப் பத்திரங்கள் செல்லாது போய்விடும் எனக் கருதி, உடன் தங்க மும் கொண்டுபோக ஏற்பாடு செய்துகொண்டார். பிரஞ்சு தேசத்துப் பாரீசிலும், ஸ்பெயின் தேசத்து மாட்ரிட்டிலும் (Madrid) அவர் நிகழ்த்திய இசை யரங்குகள் வழியாக வருவாய் உண்டாயிற்று. அவ் ஆர்களில் அவருக்கு அமைந்த நண்பர்கள்