பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்க்காலம் 39 ஓர் எண்ணம் அவர் மனத்தில் தோன்றிற்று. “2-ujjīār Qg51(955.53,3010 ” (Reverence for Life) என்பதே அவ்வெண்ணம். நாகரீகம் என் பது ஒருவர் உயிரிடத்து வைக்கும் மதிப்பை ஒட்டியது என்று சுவைட்சர் கருதினர். அஃதா வது, ஒவ்வோர் உயிரும் தொழத்தக்கது, மதிக்கத் தக்கது என்பது அவர் கருத்து.(மக்களை மதித்தல் வேண்டும் என்பதோடன்றி, பிற உயிர்கள் எல்லா வற்றையும் மதிக்கவேண்டும் என்பதே அவருடைய நோக்கம். சிறிய பிராணிகளும் உயிர்வாழ எத் துணை ஆசைப்படுகின்றன என அவர் உன்னி ஞர். நமக்கு எவ்வளவு உயிர் வாழ்தலின்கண் பற்று உண்டோ அவ்வளவு உயிருடைய மன்பதை கள் எல்லாவற்றிற்கும் உண்டு என்ற நம்பிக்கை முன்னரே அவர்க்கு மூண்டுவிட்டதொன்ருகும். அதனுல்தானே முன்னர்ப் பறவைகளின்மீது கவண்கல்லை எறிய அவர் கூசிஞர் ? அதனுல் தானே முன்னர் மீன் பிடிப்பதற்குத் தூண்டில் போட மறுத்தார் ? அதனுல்தானே தாய் தந்தையர் கற்றுத்தந்த இரவு வழிபாட்டுரையில், கடவுள் உயிருள்ள பிற பொருள்களையும் பாதுகாக்கவேண் டும் என்ற வேண்டுகோளைச் சேர்த்துக்கொண் டார் : இவற்றை இராமலிங்க ஆடிகளார் அருள் வாக்கினெடு ஒப்பிடலாம். கொடியவர்கள் பிற -வுயிர்களைக் கொல்ல முற்பட்ட பொழுதெல்லாம் அடிகளார் துடிதுடித்தார்; பிறவுயிர்கள் பதைத் ததைக் கண்ட பொழுதெல்லாம் உளம்பதைத்தார் ; மீன்களைப் பிடிக்கத் துண்டிலைப் பிறர் எடுத்துப் {