பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 போர்க்காலம் போன பொழுதும், உயிரினங்களை அகப்படுத்து தற்கு வலைகளைப் பிறர் வீசிய பொழுதும், பறவை. களைச் சிக்க வைப்பதற்குக் கண்ணிகளைப் பிறர் வைத்த பொழுதும் அஞ்சியஞ்சி நெஞ்சு புண்ணுயி ர்ை. இறைவனே நோக்கிப் பாடப்பட்ட பாட்டு ஒன்றனுள் இவற்றைப் புலப்படுத்தினர்.

  • துண்னெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்

தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்; கண்ணிஞல் 8யோ! பிறவுயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்; எண்ணியென் உள்ளம் தடுங்கிய நடுக்கம் எந்தைதின் திருவகுள் அறியும்? என்ற அடிகளார் மனநிலையிளுெடு சுவைட்சர் நிலை ஒப்புநோக்கத் தக்கது. “ வாழவேண்டும் என்று கருதும் உயிர் நான். நானே வாழவேண்டுமென்று கருதும் பிற உயிர் களின் இடையில் வாழ்கிறேன்’ என்பது அவருடைய சித்தாந்தம் ஆயிற்று. நம் உயிர் நமக்கு எவ்வளவு சிறப்புடையதோ, இனிமை யுடையதோ அவ்வளவு சிறப்பும் இனிமையும் உடையன அவரவர்க்கும் அவையவற்றிற்கும் அவ ரவரின் உயிர்களும் அவ்வவற்றின் உயிர்களும் என்று அவர் கருதினர்; தம் உயிர்க்கு இன்னுதது என்று கருதும் ஒரு செயலை வேறு உயிர்க்குச் செய்தல் ஆகாது என்ற விழுமிய குறிக்கோள் உடையவர் ஆயினர். தமக்கு இன்னதது என்று அறிந்த ஒன்றினைப் பிறவுயிர்களுக்கு ஒருவர்