பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்க்காலம் 41 செய்ய எவ்வாறு முற்படுகிறர் என்பது விளங்க வில்லையே என்னும் கருத்தமைந்த தன்னுயிர்க்கு இன்னுமை தான்.அறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னு செயல் : என்ற திருக்குறள் அவரிடையே ஒரு விழிப்புணர்ச் சியை உண்டாக்கி இருத்தல்வேண்டும். எனினும், முதலில் அவசியம் இருந்தாலன்றிப் பிற உயிர்களைக் கொல்லக்கூடாது என்ற எண்ணம் மாத்திரம் உடையவராக அவர் இருந்தார். தக்க காரணம் இல்லாமற் பிறிதுயிரைப் போக்குதல் கூடாது என்று அவர் கருதிய காலம் உண்டு ஒரு நாள், ஆப்பிரிக்கர் சிலர் ஒரு பருந்திற்குப் பெருந் துயர் தந்தார்கள். சுவைட்சர் அதனை அவர்களிட மிருந்து மீட்டுக் காப்பாற்றி வளர்த்தார். அந்தப் பருந்தோ இயற்கையில் மீனைத் தின்று வாழும் பருந்து. பருந்தினைப் பட்டினியாற் சாக விட்டு விடுவதா, அன்றி அதன் உணவிற்கு வேண்டிய சிறு மீன்களைக் கொண்டு தருவதா என்று ஆராய்ந்து, பின்னதே தம்மாற் செய்யத் தக்கது என்ற முடிவிற்கு வந்தார். அப்பொழுது, ஒவ் வொரு வேளையிலும் மனிதன் செய்யத் தக்க கொலை யாது, தகாத கொலை யாது என்ற முடி விற்கு வருதல் வேண்டுமென்று எண்ணிக்கொண் டிருந்தார். அவர் நடந்துசெல்லும் வழிகளில் எல் லாம் எறும்போ புழுவோ மிதிக்கக்கூடிய இடத்தில் ஊர்ந்துகொண்டிருந்தால், அதனை உயிருடன் அட் புறப்படுத்திக் காப்பாற்றிவிட்டுச் செல்லும் வழக்கம் உடையவர் ஆயினர். -