பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 போர்க்காலம் லாக, நல்ல ஊதியம் கிடைத்தது. அந்தப் பணத் தைக் கொண்டு லாம்பரீனில் தொடர்ந்து மீண்டும் மருத்துவ வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவர்க்கு உண்டாயிற்று. சூரிச் (Zurich) பல் கலைக் கழகம் அவருக்குக் கெளரவப் பேரறிஞர் பட்டம் வழங்கிற்று. 'பழைய காட்டோரத்தில்’ (On the Edge of the Primeval Forest) storp அவருடைய புத்தகம் இப்பொழுது முடிவடைந்து வெளியாயிற்று. அதனைப் பல மொழிகளிலும் அறிஞர்கள் மொழிபெயர்த்தார்கள். அப்புத்தகத் தில் மருத்துவ மனையைப் பற்றிய விவரங்கள் உண்டு. தாழ்ந்த மக்களுக்கு நாகரீகம் உடையவர் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி விரிவாக அப்புத்தகத்தில் அவர் எழுதியிருந்தார். 1922 ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், லண்டன் முதலிய ஊர்களுக்குச் சென்று சமயச் செய்திகள் பற்றி விரிவுரைகள் ஆற்றினர். 1923-இல் நாகரீகமும் epgpih ” (Civilisation and Ethics) stsirip அவருடைய புத்தகம் வெளியாயிற்று. முதலிற் செர்மானிய மொழியிலும் பிறகு ஆங்கில மொழி யிலும் அது வெளிப்படுத்தப் பட்டது. நாகரீகம் பாழாகிக் கொண்டிருப்பதைத் தடுக்கவேண்டும் என்ருல், ' உயிர்களின் தொழுதகைமை” என்ற அற உள்ளத்தால்தான் இயலும் என்பதை விளக்க மாக அப் புத்தகத்தில் அவர் எடுத்துக் காட்டினர். அப் புத்தகத்தை உருவாக்கிக் கொண்டிருந்த பொழுதே மீண்டும் லாம்பரீன் செல்லவேண்டும் என்ற எண்ணம் அவரை உந்திக்கொண்டிருந்தது.