பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்க்காலம் - 45 நிக்கலஸ் கோயிலிற் போதகராகக் குறைநேர வேலை பார்ப்பதற்குச் சுவைட்சர் நினைத்தபடி ஏற் பாடு ஆயிற்று. ஆளுல், லாம்பரீனிலிருந்து செய்தி ஒன்றும் கிட்டவே இல்லை. அந்நாட்டில் உள்ள நீக்ரோ மக்களைக் குறித்து அடிக்கடி சுவைட்சர் கவலை கொண்டார். கடைசியில், 1918 நவம்பர் 11-ஆம் தேதி அன்று போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. எனவே, போர் நின்றது. சுவைட்சர் பிறந்த நாடாகிய அல்சாஸ் இப் பொழுது பிரெஞ்சுக்காரர்களுக்கு உரியதாகிவிட் டது. எனவே, சுவைட்சரும் அவர் மனைவியும் இனிச் செர்மானிய குடிமக்கள் அல்லர் ; பிரெஞ்சு குடிமக்கள் ஆயினர். 1918 முதல் 1924 வரை ஆறு ஆண்டுகள் சுவைட்சர் தத்துவ விற்பன்னராகவும், இசை யறிஞராகவும், விரிவுரையாளராகவும் இருந்தார். மருத்துவத் தொழிலை ஒதுக்கி வைத்திருந்தார் என்றே சொல்லுதல் வேண்டும். சுவைட்சரின் மனைவி ஹெலன் 1919-இல் ஒரு பெண் மகவு ஈன் ருர், அதே ஆண்டில் ஸ்வீடன் பல்கலைக் கழகத் தில் வந்து சில சொற்பொழிவுகள் ஆற்றுமாறு சுவைட்சர் அழைக்கப்பட்டார். ' மரப் பெட்டியின் உள்ளே அகப்பட்டு மறைத்து கிடந்த காசுபோன்ற என்னை மக்கள் மறக்கவில்லை' என்று சுவைட்சர் சொல்லிக்கொண்டார். ஸ்வீடனில் அவர் தங்கி யிருந்தபொழுது அவர் மீண்டும் நல்ல உடனலம் பெறுதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அங்கே சில இசையரங்குகள் நிகழ்த்தினர். அவற்றின் வாயி