பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 போர்க்காலம் தளர்வும் அகத்தளர்வும் பாராது, கைவருந்திக் கண்வருந்திக் கவினுறச் சிற்பங்களை அமைப் போரை அறிந்துகொள்ள நல்ல வாய்ப்புப் பெற்ருர் சுவைட்சர். அறுசுவை உணவிற்கு உரிய பொருள்களை உழைத்து உழைத்து ஆக்குவது உழ வர் தொழிலாகவும், அவற்றை நன்றியின்றி விழுங்குவது பிறர் தொழிலாகவும் உள்ளனவே என எண்ணி ஏங்கினர். அச்சிறையக வாழ்க்கையி ல்ை சுவைட்சருடைய உடல்நிலை ஓரளவு கெட்டு விட்டது. 1918 சூலையில், போரினர் சிறையர்களை இரு திறத்திலும் பரிமாறிக்கொண்டனர். அத ல்ை, சுவைட்சரும் அவர் மனைவியும் தங்கள் சொந்த ஊர் திரும்ப வசதி ஏற்பட்டது. கால்மர் என்னும் ஊர்வரை இரயில் சென்றது. அங்கிருந்து பல கல் தொலை நடந்து டாக்டர் சுவைட்சர் சொந்த ஊர் சேர்ந்தார். அவர் மனைவி தம்முடைய பெற்ருேரைப் பார்க்கச் சென்ருர். ந்ேது ஆண்டு களுக்கு முன், அவர்கள் லாம்பரீனுக்குச் சென்ற பொழுது இருந்ததுபோன்ற நிலையில் இப்பொழுது ஊர் இல்லை. எங்குப் பார்த்தாலும் போர் அரவம் கேட்டவண்ணம் இருத்தது. டாக்டர் சுவைட்சர் ஓர் இரண சிகிச்சை செய்துகொள்ளவேண்டிய நிலையில் இருந்தார். திரும்பவும் நலமுற்றவுடன், ஏதாவது ஓர் அலுவல் பார்த்துப் பணம் சம்பா திக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தார். ஸ்டிராஸ்பர்கு நகர்மன்றத் தலைவர் நகர மருத் துவ மனையில் மருத்துவர் வேலை ஒன்றினை அவர்க்கு அளித்தார். அன்றியும், ஸ்டிராஸ்பர்கு