கே. பி. நீலமணி
11
கே. பி. நீலமணி 11
ஆரம்பப் பாடத்திற்கான சம்பிரதாயச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர், பாகவதர் தம்புராவை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். அவர்கள் இருவரும் குருவின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்தனர்.
பாகவதர் அவர்களை வாயாற, மனமாற வாழ்த்தி விட்டு அமரச் சொன்னார். பையில் அவர்கள் கொண்டு வந்திருந்த, புஷ்பம், பழங்களையும், அட்சதைத் தட்டை யும் எடுத்துக்கொண்டு இதோ ஒரு நிமிஷத்தில் வந்து விடுகிறோம் ஐயா" என்று கனவேகமாக இருவரும் கீழிறங்கிச் செல்லவுமே, அவர்களது நோக்கத்தைப் புரிந்துகொண்ட பாகவதர் மெய்சிலிர்த்துப் போனார்.
'இறைவா, என்னிடத்தில் உன் திருவிளையாடலை ஆரம்பித்திருக்கிறாயா?’ என உள்ளத்திட ம் கேட்டுக் கொண்டபோது, அவரையும் அறியாமல் அவரது விழி களின் கடையிலே கண்ணிர் பூத்து நின்றது.
அவர்கள் படியேறி வருகிற சப்தம் கேட்டது. பாகவதர் பவுண்டன் பேனாவைத் திறந்து வைத்துக் கொண்டார்.
'நோட்டுப் புத்தகம் கொண்டு வந்திருக்கிறீர்களா?'
"இதோ...'
இருவரும் ஏககாலத்தில் இரண்டு கனத்த புத்தகங் களை நீட்டினர். அதன் முதற்பக்கத்தில் நான்கு மூலை களிலும் குங்குமத்தைக் குழைத்துத் தடவி, பிள்ளையார் சுழி போட்டார். அதன் கீழ் குருவே துணை' என்று எழுதியபடி, ! உங்கள் பேர் என்ன?’ என்று கேட்டார்.
என் பெயர் டேவிட் ஜான் ஒகியோ (Olio). மாநிலத்திலுள்ள யெல்லோ ஸ்பிரிங் (Yellow Spring) என்னுடைய ஊர். என் தந்தை; டே டன் (Dayton)