உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

15

கே. பி. நீலமணி 15

ஆவலையும் புகட்டுவது அல்ல ஆசானின் வேலை என்பது அவர் கருத்து.

"எங்கோ காட்டிலிருக்கும் வண்டு, தேடி வந்து தாமரையிலுள்ள தேனைச் சுவைத்துவிட்டுச் செல்கிறது. ஆனால், அதே தடாகத்தில் தாமரை இலை மேலேயே அமர்ந்திருக்கும் தவளைக்கு, அருகிலிருக்கும் பூவின் அருமையோ, தேனின் சுவையோ புரிவதில்லை என்றால் அது மலரின் குற்றமா? பாகவதர் இப்படி தன்னைச் சமாதானம் செய்து கொண்டார்.

காடாவில் பதிவாகியிருந்த கிடார் வாத்திய இசை, “லைக் லம் ஒன் இன் லவ்" என்கிற கோனி பிரான்சிஸின்' பாடலை மென்மையாக ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. அதை ரசித்துக் கொண்டிருந்த பாபு, வாசலில் கார் வந்து நிற்கிற ஒசையைக் கேட்டுக் கைக் கடிகாரத்தைப் பார்த்த படி சட்டென்று எழுந்து வேகமாக வெளியே வந்தான்.

டாக்ஸியிலிருந்து இறங்கிய டேவிட்டையும் சோபியா வையும் பாபு வரவேற்றான்.

சிரித்தபடியே அவர்கள் பாபுவின் அறைக்குள் நுழைந் தனர். டேப் ரிகார்டர் ஒலித்துக் கொண்டிருந்தது. பாபு ஒரு பெரிய கம்பெனியின் உயர் அதிகாரி.

உங்களுக்கு கிடார் ரொம்பப் பிடிக்குமோ?" என்றான் டேவிட்.

"நான் கிடாருக்காகப் போடல்லே; பிடிச்ச ஒரு ஹிட் ஸாங்கை', இன்ஸ்ட்ரூமெண்டல்லே கேக்கறது ஒரு டேஸ்ட் இல்லையா? எனக்கு கோனி பிரான்ஸினுடைய பாட்டு ரொம்பப் பிடிக்கும்.’’

" அப்படியா? சோபியா கூட கோனி'யோட விசிறி தான் ; ஒரு கான்செர்ட்டையும் விட மாட்டாள்' என்று