கே. பி. நீலமணி
23
கே. பி. நீலமணி 23.
ஊரை, மனுஷாளை விட்டுட்டு நம்மோட இருக்க முடியும்?' கல்யாணி அம்மாள் அமைதியாகவே கூறி னாள் பாகவதருக்குக் கோபமே வந்து விட்டது.
" உனக்குக் கொஞ்சம்கூட ஞானமே இல்லேடி. சோபியாவைப் பார்க்கற போதெல்லாம் நம்ப ராஜி ஞாபகம் வர்றதுன்னு எங்கிட்டே வந்து அழுவையே?’’
'இப்போ ட்டும் இல்லியா?”
"இருந்தா, அவள் ஊரை விட்டுப் போயிட்டா என்ன பண்ணறதுன்னு கவலைப்படாம இப்படிப் பேசுவியா?"
- நான் கவலைப்பட்டு என்ன பண்ணறது? அவளை பாபுவுக்குப் பண்ணி வெச்சு பெற்ற பெண்ணாட்டமா, பக்கத்திலேயே இருத்திக்கணும்னு தான் எனக்கும் ஆசை.”
"அதைத்தான் கேட்கறேன். இதைச் சொல்ல இவ்வளவு நேரமாடி? இப்ப நான் உன் இஷ்டப்படி அதுக்கு ஒரு வழி பண்ணப் போறேன்.'
'என்ன பண்ணப் போறேள்?’’
'எனக்கு ஒரு வரம் தரணும்னு கேட்பேன்."
' வரமா...?’’
"ஆமாம். நான் அவளுடைய வித்தைக்குத்தான் குருவே தவிர, அவளோட சொந்த வாழ்க்கையைப் பத்தி அதிகாரம் பண்ண என்ன உரிமை இருக்கு? ஒரு வேண்டு கோள் தான் செய்யலாம்.'
செய்தேளா..?’’
"அதுக்குத்தான், முதல்லே இப்போ உன்கிட்ட வந்திருக்கேன்.'