உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

37

கே. பி. நீலமணி 37

சினிமாவில் சேர அளவற்ற அழகும் கவர்ச்சியும் வேண்டுமல்லா? அது அவளுக்கு இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அவள் அதற்காகவே பல படங்களைப் பார்த்தாள். அதில் வரும் கதா நாயகிகளின் அழகிற்கு தான் எந்த விதத்திலும் குறைந்தவளில்லை என்பது அவளுக்கு நம்பிக்கை. சினிமா உலகம் தனக்காகக் காத்திருப்பது போலவும், முயன்று பார்க்காதது தன்னு டைய குற்றமே போலவும் அவளுக்குப் பட்டது.

வெள்ளித் திரைகளிலெல்லாம், தன்னுடைய பொன் னிற மேனி ஒளி வீசுவது போல ஒர் இனிய கனவில்பிரமையில்- அல்லது ஆழ்ந்த நம்பிக்கையில், தன் மீது உயிரையே வைத்திருக்கும் தாயாரிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல்- கூறினால், நிச்சயம் குறுக்கே விழுந்து தடுப்பாள், இதற்கு அநுமதி கிடைக்காது என்பது அவளுக்குத் தெரியுமாதலால்-ஒரு சிறு தொகையுடனும்; திருமணத்திற்காகச் செய்து வைத்திருந்த சொல்ப நகை களுடனும் ஒர் இரவு சென்னைக்கு ரயில் ஏறி விட்டாள்.

சென்னைக்கு வந்து, கோடம்பாக்கம் வீதிகளில் அலைந்தபோது தான் அவளுக்குப் புரிந்தது; சினிமா உலகம் தன் வருகைக்காக ஏங்கவில்லை, அதில் சேருவது என்பது எத்தனை பெரிய விஷயம் என்று. தன்னுடைய அளவற்ற அழகையும் திறமையையும் பற்றி அவள் கொண் டிருந்த நம்பிக்கையெல்லாம் ஸ்டுடியோ மண்ணில் தவிடு பொடியாகி விட்டது.

அவளுக்குத் தாய் பாஷை தெலுங்கு, அதோடு தமிழும் பேசப் படிக்கக் கற்று வைத்திருந்தாள். பத்தாவது வரை படித்ததில் ஒரளவு ஆங்கில அறிவும் அவளுக்கு இருந்தது. ஆனால்- அதனாலெல்லாம் சினிமா வாய்ப்பு அவ்வளவு சுலபத்தில் கிட்டி விடுமா என்ன?

"சினிமாவில் சேரவேண்டும் என்றால் எல்லா வற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும்’ என்று சிலர்