பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மலருக்கு மது ஊட்டிய வண்டு

38 மலருக்கு மது ஊட்டிய வண்டு

சொன்னார்கள். ஆனால்-நிச்சயமாக அவள் அதற்குத் தயாராக இல்லை.

கையிலிருந்த பணமும்; கொண்டு வந்திருந்த சொல்ப நகைகளும் அந்த மூன்று மாதங்களுக்குக் கூட ஈடுகொடுக்க வில்லை. அடுத்த வேளைக்கு இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது. தான் முற்றிலும் நம்பிக்கையோடு நாடி வந்த துறையைப் பற்றித் தெரிந்து கொள்ள அவளுக்கு இந்தக் கஷ்ட நஷ்டமும்; கால அவகாசமும் தேவைப்பட்டன. ஆனால் அதை ஒரு கெட்ட கனவாக" அவள் அப்போதே மறந்து விட்டாள்.

இந்தச் சமயத்தில்தான் தனது கிராமத்தைச் சேர்ந்த ஒர் அம்மாளை எதிர்பாராமல் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவளை அந்த நிலையில் கண்டதும் அந்த அம்மாளுக்கே தாளவில்லை.

அடி பாவிப் பெண்ணே, நீ இப்படிப் பட்டணத்திலே சுத்திண்டிருக்கியே, அங்கே உன் அம்மா. நீ போனன்னிக்கு படுத்தவதான்; இப்போவோ நாளையோ உசிரை விட்டு வைக்கறதுக்குள்ளே, ஊருக்குப் போய்ச் சேருடி'- என்று. அன்போடு கடிந்துகொண்டாள்.

இந்தச் செய்தி இடி போல் அவள் நெஞ்சைத் தாக்கியது. உடனே ஒடிப்போய்த் தன் அன்புத் தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு செய்த தவற்றுக் காக மன்னிப்புக் கேட்டு அழுதால்தான் மனம் ஆறும் போலிருந்தது. ஏதோ ஒரு வித வெறியில் அன்றிரவே ஸ்டேஷனுக்கு வந்து புறப்படத் தயாராக நின்று கொண் டிருந்த பம்பாய் மெயிலில் ஏறி உட்கார்ந்து விட்டாள்.

அப்போது அவளுக்கு இந்த டிக்கெட் விஷயம் ஒரு பிரச்னையாகத் தோன்றவில்லை. கையில் காசில்லாத போது கவலைப்ப என்ன இருக்கிறது என்கிற அந்த