பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

39

கே. பி. நீலமணி 39

அசட்டுத் தைரியம்- திருவள்ளுரில் டிக்கெட் இல்லாத தால் இறக்கிவிடப் பட்ட பொழுது- துகள்துகளாகி விட்டது.

"மரணத்தறுவாயில் இருக்கும், என் தாயைப் பார்க்க முடியாமலே போய் விடுமோ?- என்று அவள் தவிப்போடு கூறியதை, அந்த டி.டி.இ. இப்போது மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திப் பார்த்துக்கொண்டிருந்தான்.

புனிதமெனத் தான் நம்பி வந்த துறையில் சில மாற் றங்களை ஏற்க நேரிட்ட போது மனம் பதறி அவள் மறுத்து விட்டவள்.

- அப்போதெல்லாம் குன்றாத உறுதி, பெற்ற தாய் மீதுள்ள பாசத்தில் குலைந்து விட்டதா- அல்லது நெருக் கடியான அந்த தருணத்திலிருந்து தன்னை மீட்க வேண்டு மென் கிற அவளுடைய சரணாகதியை நான்தான் தவறாகப் புரிந்துகொண்டு, பயன்படுத்த முனைந்து விட்டேனா?--

இது ஒரு பெரும் கேள்விக் குறியாக அந்த டி.டி.இ.யின் மனக் கண்முன் எழுந்து நின்றது.

து. என்று சிலிர்த்துக் கொண்டு எழுந்திருந்தான் «Фj GlЈабт.

"வாய்த்த தருணத்தை விட் டுவிடுவதா? வலுவில் தேடி வந்த இன்பத்தை அள்ளிச் சுவைப்பதை விட்டு, அர்த்த ராத்திரியில் ஏன் இந்த அனாவசியமான ஆராய்ச்சியும் மனப் போராட்டமும்?"

அவன் மெல்ல எழுந்து அவள் அருகில்வந்து நின்றான். தன்னை மறந்து அவள் துரங்கிக் கொண்டிருந்தாள். அழகே துயில் கொள்வது போலிருந்தது அந்தக் காட்சி.