44
மலருக்கு மது ஊட்டிய வண்டு
44 மலருக்கு மது ஊட்டிய வண்டு
அவனும் அவளும் இருப்பதனாலேயே- காசிராஜனுக்கு அந்த விளம்பரத்தின்மீது ஒருவித வெறுப்பு.
வெறுப்பு என்று சொல்வதைவிட இன்னும் உண்மை யாக அல்லது பச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால்; அந்தச் சிகப்பு முக்கோணத்தின் மீது அவனுக்கு ஒருவிதப் பொறாமை என்றே சொல்ல வேண்டும்.
ஆம்! கவலை கொள்ளுமளவுக்குப் பெருகும் இனப் பெருக்கு தன் வரையில் ஏன் தேங்கிவிட வேண்டும்? பிரச்னையாகி, நடைபாதைகளிலெல்லாம் விளம்பரமாக எச்சரிக்கிற அளவுக்கு சுலபமாகக் கிட்டும்-அல்லது பெருகிவிட்ட ஒரு விஷயம் தங்களுக்கு மட்டும் ஏன் அரி திலும் அரிதாகி விட வேண்டும்? படைக்கத் தெரிந்தவன், அதைப் பாரபட்சமின்றிப் பகிர்ந்து கொடுக்காத குறைக்கு அல்லது குற்றத்துக்கு யாரைச் சாடுவது? இறைவனின் இந்த ஒரவஞ்சனைக்கு-மனிதர்கள் இங்கு ஒரு மூலையில் விங்கி வெடிப்பதும், ஒரு மூலையில் ஏங்கிச் சாவதுமா?
அவன் குமுறினான்.
அன்று ஏனோ நேராக வீட்டுக்குப் போகக் காசிராஜ னுக்கு மனம் இல்லை. பெரிய தெருவிலிருந்து. மடத்துத் தெரு வழியாக வந்தவன், வலப் புறம் பச்சையப்பன் தெருவிலுள்ள தன் வீட்டுப் பக்கம் திரும்பாமல், நேராகக் காவிரியை நோக்கி நடந்தான்.
நதியில் நீர் இல்லை. அகன்ற மணற்பரப்பின் மீது, திட்டுத் திட்டாகக் குழுமியிருந்த மனிதக் கூட்டம், அவர் களைச் சுற்றிலும் பரவலாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியர் - இவர்களைக் கடந்து, சற்று ஒதுங்கித் தனியான தோர் இடத்தில் சென்று உட்கார்ந்து கொண் டான் காசிராஜன் .
மனைவி சாந்தா ஊரில் இல்லை. ஊருக்குச் சென்ற வளிடமிருந்து-அல்ல- ஊருக்குப் பலவந்தமாக அனுப்பப்