கே. பி. நீலமணி
45
கே. பி. நீலமணி 45.
பட்ட வனிடமிருந்து-எவ்விதத் தகவலும் இல்லை. என்ன பதிலுடன், என்று இங்கு புறப்பட்டு வருகிறாளோ?
'சரக், சரக்' என்று ஆற்று மண்ணில் நடந்து வந்த தில், ஸாக்ஸைட்யும் தாண்டி உள்ளே புகுந்து உறுத்திக் கொண்டிருக்கும் மணலைக் களையப் பூட்ஸைக் கழற்றிக் கொண்டிருந்தவன், 'ஏண்டா ராஜா, நாலு நாழியாக் கூப்பிடறேனே, காதிலே விழல்லியா?’ என்ற பழக்க மான குரலைக் கேட்டுத் திரும்பினான் காசிராஜன். அங்கு யாரும் இல்லை; ஆனால்...
காலையில். பூட்ஸைக் காலில் திணித்துக் கொண்டு அலுவலகத்துக்குப் புறப்படும்போது, அம்மா அருகில் வந்து இப்படி அழைத்ததும் அதைத் தொடர்ந்து ஏற் பட்ட வாக்குவாதங்களும் அவன் நினைவில் மோதிச் சிதறின,
"ஏண்டா ராஜா, இப்படிப் பதிலே பேசமாட்டேங் கறே? அந்தப் பெண் ஊரிலேருந்து வர்றதுக்குள்ளே நாம இந்த இடத்தைப் போய்ப் பார்த்துட்டு வந்துடலா மில்லியா?
H. H. I
Hபு_.
'ரொம்ப ஏழைப்பட்ட இடமா இருந்தாலும், கொப்பும் கிளையுமா, நிறையப் பெருகி வர்ற சம்சாரி யான குடும்பம். பணமும் காசும் நமக்கு எதுக்கு:
கல்யாணி ரெம்ப நல்ல பொண்ணு.'
அம்மா!'
அதட்டியபடி, காசிராஜன் தன் தாயை முறைத்தான்.
அந்தக் குரலின், பார்வையின் வேகத்தை ஜீரணிக்க, பதி லுக்கு இரைந்தால்தான் முடியும் போலிருந்தது.