பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மலருக்கு மது ஊட்டிய வண்டு

46 மலருக்கு மது ஊட்டிய வண்டு

பின்ன நீ என்னதாண்டா நெனைச்சிண்டிருக்கே? இப்படி எதுக்குமே வாயைத் திறந்து பதில் சோல்லாமே இருந்தா எப்படி?’’

'சொல்லவா? முதல்லே, இந்த எண்ணம் உனக்கே நியாயமா இருக்கா அம்மா? சாந்தா உன் வயிற்றிலே பிறந்திருந்தா இந்த முடிவை நீயே ஒப்புக் கொள்ளு வியா? காசிராஜனின் வாயினின்றும் சொற்கள் குமுறிக் கொண்டு வந்தன. ஆனால், அதை அவன் தாய் லட்சி யமே செய்யவில்லை.

"யார் வயிற்றில் பிறந்தா என்னடா: நியாயம் எல்லாருக்கும் பொதுதானே? என் ஒரே மகன். உனக்கு ஒண்னு பிறந்து கண்ணாரப் பார்க்கணும்னு இந்தக் கிழ ஜீவன் ஆசைப்படறதிலே என்னடா தப்பு?’’

'உன் ஆசையை நான் குறை சொல்லல்லே அம்மா; ஆனால் அதுக்காகச் சாந்தாவுக்குத் துரோகம் செய்ய நினைக்கறியே! அது பாவம் இல்லையா? அந்தக் காரியத் துக்கு என் மனசு இடங் கொடுக்கல்லேன்னுதான் சொல்லறேன்.'

இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் மனசைக் கொஞ்சம் கல்லாத்தாண்டா ஆக்கிக்கனும். ஒண்ணில்லே, இரண்டில்லே, பத்து வருஷமா நானும் பொறுமையாக இருக்கல்லியா?”

"அதுக்காக?'

"என் கண்ணை மூடறதுக்குள்ளே ஒரு பேரனையோ பேத்தியையோ எடுத்துக் கொஞ்சனும்ங்கற என்னோட ஆசை உனக்கு நியாயமானதாகப் படல்லியா? பிரளயம் மாதிரி, உள்ளே அடிச்சிண்டு மோதற அந்த ஆசைக்கு அணை போட முடியல்லே. மேலும் இவ்வளவு காலமா இல்லாமெ, இனிமேலா இவளுக்குப் பிறக்கப் போறது?’’