பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

47

கே. பி. நீலமணி 47

"அதைப்பற்றி முடிவுகட்ட நாம யாரு அம்மா? பட்டணத்திலே உங்க அப்பா அம்மாகிட்டே போய், பெரிய டாக்டராப் பார்த்து உடம்பைக் காட்டிண்டு வான்னு நீதானேம்மா அவளை ஊருக்கு அனுப்பி வைச்சே? இப்போ அந்த முடிவு தெரிஞ்சு, அவ திரும்பி வர்றதுக்குள்ளே இப்படி ஒரு கல்யாணக் காரியத்துக்கு என்னம்மா அவசரம்?’’

'முடிவாவது, முதலாவது! நீ சரியான மக்குடா ராஜா. அந்த மலட்டைப் பத்தி இனிமேத்தானா முடிவு தெரிஞ்சுக்கணும்? சும்மா, இந்தக் காரணத்துக்காகத் தான், இங்கே இருக்க வேண்டாம்னு அவளை அப்படிச் சொல்லி ஊருக்கு அனுப்பி வைச்சேன்."

'அம்மா!'

காசிராஜன் வாய்விட்டே அலறிவிட்டான். எவ்வளவு பெரிய சூழ்ச்சி! தன் மனைவியின் சம்மதத்தைப் பெறாமல் மறுமணம் செய்துகொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ளாத தாயின் அறியாமையை எண்ணி வருந்து வதைவிட, பெண்ணுக்குப் பெண்ணே முன்னின்று இழைக் கக்கூடிய கொடுமையை எண்ணிப் பார்த்தபோது இதயமே நடுங்குவது போலிருந்தது. தன் தாயின் அவா எவ்வளவு நியாயமாக இருந்தாலும், பாவம்! சாந்தாவை விட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்வதா?

பதிலே பேசாமல், கையில் பையுடன் வெளியே புறப் பட்ட மகனைத் தாய் தடுத்து நிறுத்தினாள்.

எனக்குப் பதில் சொல்லிட்டுப் போடா. நான் அவாளுக்கு வாக்குக் கொடுத்திருக்கேன்.'

"என்னாலே இப்போ ஒரு பதிலும் சொல்ல முடியா தம்மா. எல்லாம் சாந்தா வந்தபிறகு பார்த்துக்கலாம்.'