உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


7. வலி, மெலி, இடை.

பதினெட்டு மெய் எழுத்துக்களையும் உச்சரித்துப்பார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உச்சரிக்கும். இவற்றை மூன்று பிரிவில் அடக்கலாம்.

வலி :-

'க்' என்ற எழுத்தை உச்சரித்துப்பார். அது வலிய ஓசையைக் கொண்டிருக்கிறதல்லவா ? இவ்வெழுத்தைப் போலவே ச், ட், த், ப், ற்' என்ற எழுத்துக்களும் கொண்டிருக்கின்றன. இவைகளே வல்லெழுத்துகள்.

" வலிய ஓசையைக்கொண்ட க், ச், ட், த், ப், ற் என்ற ஆறு எழுத்துக்களும் வலி என்று பெயர் பெறும். வல்லெழுத்து, வல்லினம் என்றும் இதைக் கூறுவர்."

சூத்திரம் : “வல்லினம் கசட தபற வென ஆறே"

மெலி :

'ங்' என்ற எழுத்தை உச்சரித்துப்பார். அது மெலிய ஓசையைக் கொண்டிருக்கிற தல்லவா? இவ்வெழுத்தைப் போலவே ஞ், ண், ந், ம், ன் என்ற எழுத்துக்களும் கொண்டிருக்கின்றன. இவை களே மெல்லெழுத்துக்கள்.

" மெலிந்த ஓசையைக் கொண்ட ங், ஞ், ண், ந், ம், ன் என்ற ஆறு எழுத்துக்களும் மெலி என்று