பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


(9) உயிரி எழுத்தென்றால் என்ன? அது எத்தனை? எவை?

(10) மெய் யெழுத்தென்றால் என்ன? அது எத்தனை? எவை?

(1) குற்றெழுத்தென்றால் என்ன? எவை?

(2) நெட்டெழுத்தென்றால் என்ன? எவை?

(3) ஞ், ச், ங், க், த், ந், ட், ண், ன், ப், ய், ம், ர், ற். ல், ள், ழ், வ் வரிசைப்பட எழுது.

(4)ஐ, க், ஓ, ண், ன்,அ, ஆ, ல், ஒள, இ. ட், ற் - இவற்றை உயிர் எழுத்து, மெய்யெழுத்து என்ற தலைப்புக்களில் பிரித்து எழுது.

(5) வேலன் அங்கே சென்றானா? அவன் அடிக்கடி ஏன் சென்றான்? இதைத் தின்றது யார்? உம்பர்களே தேவர்கள், உப்பக்கம் பார். செய்தது எவன்? தின்றது அவனா? செய்தது அவனோ?-இவற்றிலிருந்து சுட்டுக்கும், வினாவுக்கும் உதாரணங் கொடுப்பதோடு, இவற்றில் வந்த சுட்டெழுத்து, வினாவெழுத்துக்களைத் தனியே எடுத்து எழுது.

(6) சுட்டெழுத்து, வினாவெழுத்து-இவற்றை விளக்கும் குத்திரங்களே எழுது.

(7) சுட்டெழுத்தென்றால் என்ன? எவை? ஒவ்வொன்றும் எங்கெங்குள்ள பொருளைச் சுட்டும்?

(8) வினாவெழுத்தென்றால் என்ன? எவை? ஒவ்வொன்றும் சொல்லில் எவ்வாறு வரும்?