பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


தும், ஆக ஐந்து எழுத்துக்களும் வினாப் பொருளை உணர்த்தின. அவற்றுள் எ, ஏ, யா சொற்களின் முதலில் வந்தன. ஆ, ஏ, ஓ என்ற மூன்றும் சொற்களின் பின்னால் வந்தன.

" ஆ, எ, ஏ, ஓ" - என்ற நான்கு உயிர் எழுத்துக்களும் "யா" என்ற எழுத்துமாக ஐந்து எழுத்துக்கள் வினாப் பொருள் தரும் பொழுது வினாவெழுத்துக்கள் என்று பெயர் பெறும். அவற்றுள் எ, ஏ, யா மூன்றும் சொற்களின் முதலும் ஆ, ஏ, ஓ என்ற மூன்றும் சொற்களின் பின்னும் வரும்."

சூத்திரம் " எயா முதலும் ஆ ஓ ஈற்றும்

ஏயிரு வழியும் விவைா கும்மே."

பயிற்சி

(1) இலக்கணம் என்றால் என்ன?

(2) ஐந்து இலக்கணம் யாவை?

(3) எழுத்திற்கு எத்தனை வடிவம் உண்டு? எவை?

(4) ஒலி வடிவு என்றால் என்ன?

(5) வரி வடிவு என்றால் என்ன?

(6) எழுத்து எத்தனை வகைப் படும்? எவை?

(7) ஆ, உ, ஐ, எ, ஓ, ஏ, ஒள, அ, ஈ, இ, ஊ, ஒ - இவற்றை ஒழுங்கு பட எழுது.

(8) மேற் கூறிய எழுத்துக்களின் பெயர் யாது? அவற்றிற்கு அப்பெயர் அமையக் காரணம் யாது?