பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


சுட்டும். உகரம் நடுவில் இருக்கும் பொருளையும், பின்னிருக்கும் பொருளையும், மேலிருக்கும் பொருளையும் சுட்டும்.

"உகரம் உலக வழக்கில் இல்லை: செய்யுள் வழக்கில் உண்டு.”

சூத்திரம்:- "அ இ உ முதல் தனிவரில் சுட்டே."

வினா:

எவன் ஒடினான்?-இதில் 'எ' சொல்லுக்கு முதலில் வந்து வினாப்பொருள் தந்தது.

ஏன் பேசினாய்?-இதில் 'ஏ' சொல்லுக்கு முதலில் வந்து வினாப்பொருள் தந்தது.

படித்தது யார்?- இதில் 'யா' சொல்லுக்கு முதலில் வந்து வினாப்பொருள் தந்தது.

பாடியது அவனா?-இதில் 'ஆ' சொல்லுக்கு ஈற்றில் வந்து வினாப் பொருள் தந்தது.

செய்தது அவனே ?-இதில் 'ஏ' சொல்லுக்கு ஈற்றில் வந்து வினாப் பொருள் தந்தது.

ஆடினது அவனே ?-இதில் 'ஏ' சொல்லுக்கு ஈற்றில் வந்து வினாப் பொருள் தந்தது.

மேற் கூறிய வற்றில், ஆ, எ, ஏ, ஓ என்ற நான்கு உயிர் எழுத்துக்களும் 'யா' என்ற எழுத்