பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


அ, இ, உ, என்ற மேற் கூறிய மூன்று எழுத்துக்களும் குற்றெழுத்துக்களே. என்றாலும் அவை மூன்றும் சொற்களின் முதலில் வந்து பொருள்களேச் சுட்டிக் காட்டின.

அவன், இவன், உவன் என்றால் அந்த மனிதன், இந்த மனிதன், உந்த மனிதன் என்று பொருள் படும். ஆகவே அ, இ, உ என்ற மூன்றும் அந்த, இந்த, உந்த என்ற பொருள் கொண்டு பொருள்களைச் சுட்டின. இவ்வாறு சுட்டெழுத்துக்கள் பொருள் படும். அலை, இலை, உலை என்ற சொற்களில் அ, இ, உ என்ற மூன்றும் சொற்களின் முன் வந்துள்ளன. ஆனால் அவைகள் சுட்டிக் காட்ட வில்லை. அவைகளுக்குப் பொருளும் இல்லை. ‘அது’ என்ற சொல் துாரத்தில் உள்ள பொருளைச் சுட்டியது. ‘இது’ என்ற சொல் பக்கத்தில் உள்ள பொருளேச் சுட்டியது. ‘உது’ என்ற சொல் நடுவில் உள்ள பொருளைச் சுட்டியது. ‘உது’ உப் பக்கம்-என்ற சொல் பின் உள்ள பொருளைச் சுட்டியது. உம்பர்—என்ற சொல் மேலிடப் பொருளைச் சுட்டியது. “அ, இ, உ என்ற மூன்று குற்றெழுத்துக்களும் சொற்களின் முதலில் வந்து, தனித்துப் பொருள் பட்டு, பொருள்களைச் சுட்டிக் காட்டினால் சுட்டெழுத்து என்று பெயர் பெறும்.

அவற்றுள் அகரம் தூரத்தில் உள்ள பொருளைச் சுட்டும். இகரம் சமீபத்திலுள்ள பொருளைச்