பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


எ, ஒ, என்ற எழுத்துக்களும் உச்சரிக்கும். இவைகளே குற்றெழுத்துக்கள்.

"குறுகிய ஓசையை உடைய அ, இ, உ, எ, ஒ-என்ற ஐந்து எழுத்துக்களும் குற்றெழுத்தாம். இதற்குக் குறில் என்ற வேறு பெயர் உண்டு."

நெடில்:

'ஆ' என்ற எழுத்து நீண்ட ஒசையை உடையதாய் இருக்கிறது. இது போலவே ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள-என்ற எழுத்துக்களும் உச்சரிக்கும். இவைகளே நெட்டெழுத்துக்கள்.

"நீண்ட ஓசையை உடைய ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள-என்ற ஏழு எழுத்துக்களும் நெட்டெழுத்தாம். இதற்கு நெடில் என்ற வேறு பெயர் உண்டு.”

சுட்டு:

அவன் அங்கு சென்றான்-இதில் 'அகரம்’ 'அவன்' 'அங்கு' என்ற இரு சொற்களில் முன் வந்து ஒரு ஆளையும், ஒரு இடத்தையும் சுட்டிக் காட்டிற்று.

இவன் இங்கு இருந்தான்-இதில் 'இகரம்’ 'இவன்', 'இங்கு', என்ற இரு சொற்களில் முன் வந்து ஒரு ஆளையும், ஒரு இடத்தையும் சுட்டிக் காட்டிற்று.

உவன்-இதில் 'உ கரம்' சொல்லின் முதலில் வந்து ஒருவனைச் சுட்டிக் காட்டிற்று.