பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





"வேறு ஒன்றின் உதவியை நாடாது, தானே தனித்து இயங்கி, மெய்யெழுத்தையும் இயங்கும் படிச் செய்கிற அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள-என்ற பன்னிரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்தாம்.”

மெய் எழுத்து:-

உடம்பு தனித்து இயங்காது. உயிரின் உதவி பெற்றே இயங்கும். அது போல மெய்யெழுத்தும் தானே தனித்து இயங்காது. அது உயிர் எழுத்தின் உதவி கொண்டே ஒலிக்கும் "தானே தனித்து இயங்காது, த லை யி ல் புள்ளியைக் கொண்டதாய், உயிர் எழுத்தின் உதவியால் உச்சரிக்கக் கூடிய,

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன், என்ற பதினெட்டு எழுத்துக்களும் மெய் எழுத்தாம்."

6. குறில், நெடில், சுட்டு, வினா.

உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டையும் உச்சரித்துப்பார். உச்சரிக்கும் பொழுது ஏற்படும் ஒலியின் வேறு பாட்டைக் கவனி. 'அ' என்ற எழுத்திற்கும் 'ஆ' என்ற எழுத்திற்கும் உள்ள வேறு பாட்டைக் கவனி.

குறில்:-

'அ' என்ற எழுத்து குறுகிய ஓசையை உடையதாய் இருக்கிறது. இது போலவே இ, உ,