உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


பெயர் பெறும். மெல்லெழுத்து, மெல்லினம் என்றும் இதைக் கூறுவர்."

சூத்திரம் :-

"மெல்லினம் ஙஞண நமன என ஆறே."

இடை :

'ய்' என்ற எழுத்தை உச்சரித்துப்பார். இது வலிந்து உச்சரிக்கின்றதா? இல்லை. அல்லது இது மெலிந்து உச்சரிக்கின்றதா? அதுவும் இல்லை. இரண்டிற்கும் இடையிட்டு உச்சரிக்கின்றது. இதைப் போலவே ர், ல், வ், ழ், ள் என்ற எழுத்துக்களும் உச்சரிக்கின்றன. இவைகளே இடை எழுத்துக்கள்.

“ வலிந்தும் மெலிந்தும் உள்ள ஒலியைக் கொள்ளாது, இரண்டிற்கும் இ டை ப் ப ட் ட ஒலியை உடைய ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறு எழுத்துக்களும் இடை என்று பெயர் பெறும். இடை யெழுத்து, இடையினம் என்றும் இதைக் கூறுவர்.”

சூத்திரம் :-

" இடையினம் யரல வழள என ஆறே." மேற் கூறியவாறு மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் வலி, மெலி, இடை என மூவகைப்படும்.

பயிற்சி

1. மெய்யெழுத்தென்றால் என்ன ? எத்தனை ? எவை? 2