பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


2. மெய்யெழுத்து எத்தனை வகைப்படும்? எவை?

3. வல்லெழுத்து என்றால் என்ன? எவை? சூத்திரம் எழுது.

4. மெல்லெழுத்து என்றால் என்ன? எவை? சூத்திரம் எழுது.

5. இடையெழுத் தென்றால் என்ன? எவை? சூத்திரம் எழுது.

6. முருகன் ஆடுகளைப் பார்த்தான். அவன் ஓடிவந்தான். இலைகளில் ஈக்கள் மொய்க்கின்றன. பகல் பக்கம் பார்த்துப் பேசு; இரவு அதுவும் பேசாதே-இவற்றிலுள்ள உயிர் எழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் தனித்தனி பிரித்தெழுது.

7. பக்கம், சக்கரம், சிறப்பு, பச்சை, பட்டம், பத்தன், கங்கணம், பஞ்சு, பண்டம், பந்து, பன்றி, மரம், வள்ளம்:, இவற்றில் வந்த மெய்யெழுத்துக்களை இனம் பிரித்து எழுது.

8. உயிர்மெய், ஆய்தம் :-

இதுவரையிலும் முதலாளியாகிய முதல் எழுத்தைப் பற்றித் தெரிந்தோம். இனிமேல் முதாளியைச் சார்ந்தவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுவோம். வியாபாரத்தைப் பொறுத்து முதலாளியைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கை யிருக்கும். முதல் எழுத்தைச் சார்ந்த சார்பெழுத்துக்கள் அவ்வாறன்று, அவை மொத்தம் பத்து. அவையே உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம்.