பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


குற்றியலிகரம், ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பனவாம்.

உயிர்மெய்:

அன்பே சிவம்-இவை இரு சொற்கள். இவற்றின் ஒவ்வொன்றிலும் மூன்றே எழுத்துக்கள் இருக்கின்றன. மேற்கூறிய உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும் தான் இருக்கின்றன வென்று கொள்ளுவோம். அப்பொழுது இவ்விரு சொற்களையும் “அ-ன்+ப் + ஏ, ச்+இ+வ் + அ +ம்" என்று ஒன்பது எழுத்துக்களால் எழுத நேரும். அப்பொழுது எழுத்துப் பெருக்கம் அதிகமாகும். எழுதவேண்டிய கருவியும் அதிகம் வேண்டும். காலமும் நீடிக்கும். ஆகவே உயிரையும் மெய்யையும் சேர்த்து ஒரு எழுத்து உண்டாக்கினர். இக்கூட்டெழுத்தே உயிர்மெய்.

க-என்ற எழுத்தைப்பார். இது க்+அ என்ற இரு முதல் எழுத்துக்கள் சேர்ந்து வந்திருக்கின்றது. இது போல பதினெட்டு மெய்யெழுத்துக் களின் மேலும் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் தனித்தனி சேரும். அவ்வாறு தனித்தனி சேரும் பொழுது இருநூற்றுப் பதினாறு எழுத்துக்கள் உண்டாகின்றன.

"பதினெட்டு மெய்யெழுத்துகளின் மேலும் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் தனித்தனி சேர உயிர்மெய் யெழுத்துக்கள் மொத்தம் இரு நூற்றுப் பதினறாம்."