உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


மார்பில் உள்ள காற்றுப் பையோடு சேர்கின்றது. காற்று பையிலிருந்து வெளிப்படுகின்றது. அப்போது அது சொல்லுக்கு உறுப்பாகாமல் வெளிப்படலாம். அப்பொழுது அது ஓசை என்று பெயர் பெறும். சொல்லுக்கு உறுப்பாகவும் வெளிப்படும். அப் பொழுது அது ஒலி என்று பெயர் பெறும்.

நமது முயற்சியால் உடலின் உள்ளே இருக்கின்ற காற்றை எழுப்புகின்றோம். அவ்வாறு எழுகின்ற காற்று ஒலியாக மாறுபடுகின்றது. அவ்வொலி மார்பு, கழுத்து, தலை, மூக்கு என்ற நான்கில் ஒன்றில் பொருந்துகின்றது. பின் அது உதடு, நாக்கு, பல், மேல்வாய் இவற்றின் முயற்சி வேறு பாட்டால் பல வகைப்பட்ட எழுத்துக்களாய்ப் பிறக்கிறது.

ஒலி வேறுபாடு :

ர, ற - இவை யிரண்டும் ஒலியில் வேறுபட்னவே.

ர - என்ற எழுத்து இடையினத்தைச் சார்ந்ததாகும். அண்ணத்தை நுனிநா தடவுதலால் இவ்வெழுத்துப் பிறக்கின்றது.

ற - என்ற எழுத்து வல்லினத்தைச் சார்ந்ததாகும். அண்ணத்தை நுனிநா மிகப்பொருந்த இவ்வெழுத்துப் பிறக்கின்றது.