பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


2. ஆய்தவெழுத் தென்றால் என்ன ? அதன் பெயர்க் காரணம் யாது? அது எவ்வாறு வரும்?

3. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்; கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். எஃகுடம்பினர் எய்துவர் புகழ்-இவற்றில் உள்ள எழுத்துக்களைக் கீழ் வரும் கட்டத்தில் எடுத்து எழுது.

உயிர் | மெய் | உயிர் மெய் | ஆய்தம் - குறில் | நெடில் | வலி| மெலி | இடை| =- - - | | |

9. ர, ற; ல, ழ, ள; ந, ன, ண-இவற்றின் ஒலி, பொருள் வேறுபாடு.

ஒவ்வொரு எழுத்தின் ஒலியையும் நன்கு தெரிதல் வேண்டும். தெரியா விட்டால் சில எழுத்துக்களைப் பிழைபட உச்சரிப்போம். உச்சரிக்கிற படியே எழுதுவோம். அப்பொழுது சொல்ல விரும்பும் பொருள் மாறுபட்டு விடும்.

நமது கழுத்தில் சோற்றுக் குழாயும், காற்றுக் குழாயும் இருக்கின்றன. அவற்றுள் காற்றுக் குழாய்