இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ர, ற-பொருள் வேறுபாடு
அரம் ஓர் ஆயுதம்.
அறம் - தர்மம்.
அரை_ பாதி.
அறை - இடம்.
இரத்தல் - பிச்சை எடுத்தல்.
இறத்தல் - சாதல்.
இரை - ஆகாரம்.
இறை - அரசன்.
உரை_சொல்.
உறை - பை.
கரி . யானை.
கறி - காய்கறி.
துரை - தலைவன்.
துறை - நீர்த்துறை.
பொரி - நெற்பொரிபோன்றன.
பொறி - இயந்திரம்.
ல, ழ, ள-ஒலி வேறுபாடு:-
ல, ழ, ள என்ற மூன்று எழுத்துக்களும் இடையின எழுத்துக்களே. என்றாலும் ஒலியில் வேறுபாடு உண்டு.
ல-அண்பல் முதலை நாவிளிம்பு வீங்கி ஒற்ற, 'லகரம்' பிறக்கின்றது.
ழ-அண்ணத்தை நுனி நாத் தடவ. 'ழகரம்' பிறக்கின்றது.
ள-அண்ணத்தை நாவிளிம்பு வீங்கி வருட 'ளகரம்' பிறக்கின்றது.
(இவ்வெழுத்துக்களை மாறுபாடு இல்லாதே ஒலிக்கின்றனர்.)