பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ல, ழ, ள - பொருள் வேறுபாடு:-

இலை-தழை. இழை - பஞ்சுநூல். இளை - வேலி. உலவு உலாத்து. உழவு வேளாண்மை.

உளவு - வேவு.

கலி - வறுமை. கழி - உப்பங்கழி. களி - மகிழ்ச்சி.

உலை - கொல்லன் உலை. உழை - பக்கம். உனை- பிடரிமயிர்.

ந, ன, ண- ஒலிவேறு பாடு:-

ந, ன, ண என்ற மூன்று எழுத்துக்களும் மெல்லெழுத்துக்களே. என்றாலும் ஒலியில் வேறுபாடு உண்டு.

ந-அண்பல் அடியை நா நுனி ஒற்ற 'நகரம்' பிறக்கின்றது.

ணகரம்-நுனி அண்ணத்தை நுனிநா பொருந்த பிறக்கின்றது.

ன-அண்ணத்தை நுனிநா மிகப் பொருந்தினால் 'னகரம்' பிறக்கின்றது.

(இவ்வெழுத்துக்களையும் மாறுபாடு இல்லாதே ஒலிக்கின்றனர்.

ந, ண, ன,—பொருள் வேறுபாடு :-

தந்தம் -யானைக் கொம்பு-