உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


7. எவ்வெவ் விகுதிகள் தன்மை, வினையில் ஒருமை, பன்மை காட்டும்?

8. எவ்வெவ் விகுதிகள் முன்னிலையில் ஒருமை பன்மை காட்டும்?

9. படர்க்கை ஆண்பால், பெண்பால், பலர்பால் காட்டும் விகுதிகள் யாவை?

10. படர்க்கையில் ஒன்றன் பாலும், பலவின் பாலும் காட்டும் விகுதிகள் யாவை?

III. சொற்றொடர்

1. சொற்றொடராவது யாது ?

வேலன், உண்டான், வெண்ணெய்-இவை ஒவ்வொன்றும் ஒரு சொல்.

வேலன் வெண்ணெய் - இதில் வேலன் என்ற சொல்லை வெண்ணெய் என்ற சொல் தொடர்ந்திருக்கின்றது. இவ்வாறு வருவது சொற்றொடராம்.

வேலன் வெண்ணெய் உண்டான் - இச்சொற்றொடர் ஒரு முற்றிய பொருளைக் கொடுத்தது. இவ்வாறு வருவது முற்றுச் சொற்றொடராம். அதுவே வாக்கியமாகும்.

"சொற்கள் தொடர்ந்து நின்று ஒரு முற்றிய கருத்தைக் கொடுப்பது முற்றுச் சொற்றொடர் என்று பெயர் பெறும். அதுவே வாக்கியம் எனவும் படும்."