பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


படர்க்கைப் பலர்பால் வினைகள்:- 'அர், ஆர், ப, பார்' என்ற விகுதிகளுடைய வினைச் சொற்களே படர்க்கைப் பலர்பால் வினைச் சொற்களாம். (உ-ம்) நடந்தனர். நடந்தார், நடப்ப, நடமார்.


படர்க்கை ஒன்றன்பால் வினைகள்:- 'கு, டு, து, று, என்ற விகுதிகளுடைய வினைச் சொற்களே படர்க்கை ஒன்றன்பால் வினைச் சொற்களாம். (உ-ம்) உண்கு, உண்டு, நடந்தது, சேறு.


படர்க்கைப் பலவின்பால் வினைகள்:- 'அ, ஆ’ என்ற விகுதிகளுடைய வினைச் சொற்களே படர்க்கைப் பலவின்பால் வினைச் சொற்களாம். (உ-ம்) நடந்தன, நட வா.

பயிற்சி

1. மூவிடப் பெயர்கள் யாவை? உதாரணங் கொடு.

2. தன்மைப் பெயர்கள் யாவை?

3. முன்னிலைப் பெயர்கள் யாவை?

4. படர்க்கைப் பெயர்கள் யாவை?

5. நான், அரசன், யான், அவன், நாம், அவர்கள். யாம், அரசர்கள். நாங்கள், அவள், யாங்கள், அரசி, நீ, அவர்கள், நீர், அரசியர்கள், நீர், அவர்கள், நீவிர், அது, நீங்கள், அவை, மரங்கள்- இவற்றிலிருந்து தன்மை, மு ன் னி லை, படர்க்கை முதலிய ஒருமை குறிக்கும் சொற்களையும், பன்மை குறிக்கும் சொற்களையும் தனித்தனி எடுத்து எழுது.

6. மூவிட வினைகளை உதாரணத்தால் விளக்கு.