43
பயிற்சி
1. மாடுகள் கண்கள். மாடுகளின் கண்களில். மாடுகளின் கண்களில் கரு விழி இருக்கின்றது. நான் சாப்பிட்ட. நான் சென்றேன். படித்தாய்.-இவற்றைச் சொற்றொடர் ஆகாதது, எச்சச்சொற்றொடர், முற்றுச்சொற்றொடர் என்ற தலைப்புக்களில் பிரித்து எழுது.
2. நாய் சென்றது. நான் அவனேக் கண்டேன். நீலன் ஓடினான். காலன் வந்தான். மூலன் அவனை நீக்கினான். கொற்றன் கோவிலைக் கட்டினான். சாத்தன் சாற்றைக் குடித்தான்-இவ்வாக்கியங்களிலுள்ள எழுவாய், பயனிலை, செயப்படு பொருள்களைத் தனித்தனி எடுத்து எழுது.
3. ஏற்ற குறிகளை அமைத்து எழுது:-
முருகன் வேலன் கண்ணன் யாவரும் சென்றனர் அங்கு மணியனைக் கண்டனர் கண்டவுடன் வட்டஞ் சுற்றி வழியேபோ என்பதே பழமொழியாகும் என்று ஒருவருக் கொருவர் கூறினர் நீ எப்பொழுது திருந்துவாய் என்று வினவினர் இனி ஓடாதே வாழ்க்கையைப் பாழ்படுத்தாதே அடங்கி நட நல் வாழ்வு அடைவாய் என்று கூறிச் சென்றனர்-
ஐம்பெரும் பூதங்களாவன நிலம் நீர் தீ காற்று ஆகாயம்