8"சொல்லுக்கு நடுவில் சில விடத்து ஐகாரத்தின் பின்
னும், யகர மெய்யின் பின்னும் வருகிற நகர மெய் யோடு ஞகர மெய் போலியாய் வரும்." சூத்திரம்:
'ஜகான் யவ்வழி கவ்வொடு சில்வழி
ஞஃகான் உறழும் என் மரும் உளரே' குறிப்பு:- நயம் - ஞயம்; நாஞ்சில் - ஞாஞ்சில்; நேயம் - ஞேயம் என மொழி முதல் நகரத்திற்கு ஞகரமும், ஞண்டு - ஞெண்டு என மொழி முதல் அகரத்திற்கு எகரமும் போலியாய் வரும். ஐந்து - அஞ்சு, உய்ந்தனன் - உய்ஞ்சனன் என நகர, தகரங்களுக்கு ஞகர, சகரங்கள் போலியாய் வரும். பித்து - பிச்சு வைத்த - வைச்ச எனத் தகரத் திற்கு சகரம் போலியாய் வரும்.
நேயம் - நேசம், கயம் - கசம் என யகரத்திற் குச் சகரம் போலியாய் வரும்,
இறுதிப் போலி
முகம் - முகன்; 'முகம்' என்பது பால் பகா வஃறி ணைப் பெயர். அதன் ஈற்றில் நின்ற மகரம் னகர மாய் நின்றது.
'பால் பகா வஃறிணைப் பெயர்களின் ஈற்றிலே நின்ற மகரமெய்க்குப் பதில் னகரமெய் வ ரு த ேல இறுதிப் போலியாம்' சூத்திரம்:
"மகர இறுதி அஃறிணைப் பெயரின் -
னகர மோடு உறழா நடப்பன உளவே"
குறிப்பு:- பந்தல் - பந்தர் - இதில் லகரத்திற்கு ரகர
போலியாயிற்று.