பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 25 வீழ்ந்த மாலையிலும், கதிர் எழாதவைகறையிலும் தாமரை மலராது. பனி பெய்யும் இந்த இரவில் அல்லி, நெய்தல், ஆம்பல் முதலியனவே மலரும். ஞாயிறுமுன் பனி போல', என்று கூறும் ஒப்புமைக்கு ஏற்ப, ஞாயிறு புறப்படத் தொடங்க - பனி மறையத் தொடங்க-அந்நேரத்திலேயே தாமரை மலரத் தொடங்கும். அதனால் தாமரைக்குப் பனிக்கு அஞ்சி என்னும் பெயர் தரப்பட்டுள்ளது. பணி பெய்யும் இரவில் திங்கள் (சந்திரன்) கதிர் (ஒளி) வீசும்; அதன் ஒளி குளிர்ச்சியாய் இருக்கும். (பனி-குளிர்ச்சி) அதனால் அதற்குப் பணிக் கதிர் என்னும் பெயர் தரப் பட்டுள்ளது. தான் மலர்தலுக்கு இடையூறாக இருக்கும் பனி மட்டுமன்று திங்களும் தாமரை மலருக்குப் பகை எனச் சொல்லப்பட்டுள்ளது. இதனைச் சீவக சிந்தாமணியில் உள்ள, 'களிப்புறு சொல்லளை இப் பறந்து காளைதன் பனிக்கதிர்ப் பகைமலர்ப் பாதஞ் சேர்ந்ததே'-(1020) என்னும் பாடல் பகுதியில் காணலாம். பனிக்கதிர்=திங்கள்; பனிக்கதிரின் பகை மலர் தாமரையாகும். இந்தப் பகை நிலைமையை, அம்பிகாபதி காதல் காப்பியம்' என்னும் நூல் வேறொரு கோணத்தில் நின்று அறிவிக்கிறது. பகலில் மலரும் தாமரை முதலிய மலர்களும், இரவில் மலரும் அல்லி முதலிய மலர்களும் ஒன்றுக்கு ஒன்று பகையாம். பகலில், குவிந்து கிடக்கும் அல்லி முதலிய மலர்களைப் பார்த்துத் தாமரை எள்ளி நகையாடி - சிரிப்பாய்ச் சிரிக்கிற தாம். (சிரிப்பு = மலர்ச்சியழகு). இரவில், குவிந்து கிடக்கும் தாமரையைப் பார்த்து அல்லி முதலிய மலர்கள் எள்ளி நகைக்கின்றனவாம். பல்வகை மலர்க்கொடி பரவிய வாவியில் சில்வகை மலர்கள்iசிரிப்பாய்ச் சிரிக்கும்;