பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மா தவம் புரிவாள் அகவிதழ் குவிந்துதாம் அயர்வுற் றிருந்த பகலெலாம் தம்மைப் பார்த்துச் சிரித்த தாமரை குவிந்து தருக்கடங் கிடவே ஏமம் இலாமே இருந்தவவ் விரவில், அல்லியும் நெய்தலும் ஆம்பலும் மலர்ந்தே எள்ளி மரையை இன்பமாய்ச் சிரிக்கும்" (7:75-82) என்பது பாடல் பகுதி. இச் சூழ்நிலைகளையெல்லாங் கொண்டு காணுங்கால், தாமரைக்குப் பணிக்கஞ்சி' என்னும் பெயர்ப் பொருத்தம் புலப்படும். 1.10 அருகனும் தாமரையும் அருகன் சமணத் திருநெறிக் (சைனமதக்) கடவுளாவார். அவருக்குத் தாமரை இருக்கையா யிருத்தலின் அதற்கு 'அருகன் வாகனம்' (சா.சி.பி.) என்னும் பெயர் அளிக்கப் பட்டுள்ளது. வாய்ப்பு நேருங்கால் வாளா விடலாகாது; சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சொல்லி விடவேண்டும். பொதுவாகத் தாமரை நான்முகனுக்கும், செந்தாமரை திருமகளுக்கும், வெண்டாமரை கலைமகளுக்கும் உரிய இருக்கைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. இவர்களோடு ஒரு போட்டிபோல் அருகனும் தாமரை இருக்கைஉடையவராகச் சொல்லப்பட்டுள்ளார். இங்கே ஒரு சிறு ஆய்வு தேவைப் படுகிறது. - 1.10.1 மலர்மிசை ஏகினான் அருகன் தாமரை வாகனன் என்பது, திருக்குறளில் உள்ள . . 'மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (3) என்னும் குறளை நினைவு செய்கிறது. இதைக் கொண்டு திருவள்ளுவரைச் சமணர் எனக் கூறுபவர் உளர். இந்தக்