பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் முன்னுரை மர இனப் பெயர் வைப்புக்கலை' என்னும் பெயரில் ஒரு (சுமார்) அறுநூறு பக்கங்களில் ஒருநூல் எழுதினேன். அறுநூறு பக்கங்களில் நூல் வெளியிடின் அறுபது உரூபா விலை போட வேண்டியிருக்கலாம்; எனவே அதை மூன்று பாகங்களாகப் பிரித்து வெளியிடின், ஒவ்வொன்றின் விலையும் குறைந்த அளவில் தெரியும் - வாங்குவோர்க்கு மலைப்பா யிராது - என நண்பர்கள் அறிவுரை கூறினர். அவ்வாறே மூன்றாகப் பிரித்து வெளியிடலானேன். முதல் பாகத்தின் கையெழுத்துப் படியைப் புதுச்சேரி அரசின் நிதியுதவிக்காக 1989-ஆம் ஆண்டு அனுப்பி யிருந்தேன். ஓரளவு நிதியுதவி 1990-ஆம் ஆண்டுதான் கிடைக்கும்; எனவே, அதை 1990-ஆம் ஆண்டுதான் வெளியிட முடியும். எனவே, அதற்குள் இரண்டாம் பாகத்தை நிதியுதவி பெறாமல் நாமே வெளியிட்டு விடலாம் என்றெண்ணி 1989-ஆம் ஆண்டு மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்' என்னும் பெயரில் வெளியிட்டேன். பின்னர் முதல் பாகத்திற்கு 1990-ஆம் ஆண்டு புதுச்சேரி அரசின் நிதியுதவி ஒரளவு கிடைத்ததால், அதை 1990-ஆம் ஆண்டு வெளியிட்டேன். இந்த மூன்றாம் பாகத்திற்கு இந்த 1991-ஆம் ஆண்டு புதுச்சேரி அரசின் நிதியுதவி ஒரளவு கிடைத்ததால், இதை மாதவம் புரிவாள்' என்னும் பெயரில் வெளியிட்டுள்ளேன். பின்னர் ஒருகால் வாய்ப்பு நேரின் - அதாவது அடுத்த பதிப்பு வெளியிட நேரின், மூன்று பாகங்களையும் சேர்த்து 'மரஇனப் பெயர் வைப்புக்கலை' என்னும் தலைப் பெயரில் வெளியிடலாம். இந்த மூன்றாம் பாகத்தில் மரஇனம் பற்றிய ஏழு தொடர் கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரையின் பெயர் மாதவம் புரிவாள்' என்பது. ஒருவகைக் கவர்ச்சிக்காக ம,ாதவம் புரிவாள்' என்னும் முதல் கட்டுரையின்