醬 மாசிட்டின் லூதரின்
அதுபோலவே, அசீசீ என்ற நகரத்தில் பிரான்சிஸ் என்ற அரிய மத ஊழியர் ஒருவர் பிறந்து வளர்ந்து, இயேசு பெரும்ானுடைய இலட்சியங்கனைக் கனி மரம் களாகம் பயிரிட அரும்பாடுபட்டார்!
பதினாறாம் நூற்றாண்டின் துவக்கக் காலத்தில் இயேசு என்ற ஞானப் புனிதரின் ஞான மேன்மை என்ற விளக்கைக் குன்றின் மீது ஏற்றிவைத்து ஒளிபரப்பும் ஊழியத்தையும், அவரது தூய்மை மிகுந்தன்ேதாக்கத்தின் புனிதம் கெடாமல் பாதுகாக்க்வும், அதை இந்த அறியாமை சூழ்ந்த மக்கள் இடையே எடுத்தோதனம் மார்ட்டின் லூதர் என்பவர் தோன்றினார்!
பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதிக் காலத்தில் ஜெர்மனி நாட்டில் ஹன்ஸ் லூதர் மார்க்கரேட் அம்மை யார் என்ற தம்பதிகளுக்கு 1483-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 10-ம் நாள் மார்ட்டின் லூத்ர் பிறந்தார்.
ஒர் ஏழைக் குடும்ம்ே, எளிய உணவு, அல்லும் பகலும் ஆயரா உழைப்பு: வறுமையில் செம்மை; வேலையில் உண்மை; கல்வியில் ஊக்கம்: இசையில் இணையிலா ஆர்வம் வாக்கில் வளம்; வன்மை: "நா நடனத்தின் பேச் சில் நயம், சாதுர்யம்: எடுத்த, பன்னியை எப்பாடு கட்டும் முடிக்கும் மனத்தின்மை: எந்த எதிர்ப்புக்கும் ஏறுபோல் நடமிடும் பீடு நடை: நியாயமான மனசாட்சி உண்மைக்கு உயிர் பலி, ப்ோன்ற சீரிய, அரிய, உரிய பண்புகளை உடையவர் மார்ட்டின் லூதர் என்ற இளைஞர்:
ஹன்ஸ் லுத்தர் வறுமையின் கோடை வெப்பும் தாங்காமல் பிறந்த ஊரை விட்டு, சாக்சோனிய மாவட்டத் தின் ஐஸ்லேயின் எனும் ஊரில் குடியேறி, செப்பு உலோகம் கிடைக்கும் சுரங்கங்களில் பணியாற்றும் சாதாரண ஒரு தொழிலாளியாய் வாழ்ந்தார். இவருடைய மகன்தான்் மார்ட்டின் லூதர் என்றால் அவரது வளர்ப்பு எப்படி ஆமைந்திருக்கும் என்பது நமக்குப் புலம்படுகிறது அல்லவா?