5
எப்பொழுது பார்த்தாலும் இவற்றின் நூல்கள் பத்து இலட்சத்துக்குக் குறையாமல் மக்களிடையே உலவும் என்று கூ றல் மிகையன்று.
மூதி நூலகம் (Mudie's Library) என்ற நூலகம் செல்வாக்கோடு விளங்கிய காலத்தில், அதன் விருப்பப்படியே நூல்கள் வெளியிடப்பட்டன. அந்த நூலகத்தைப் போன்றே இன்றைய சுழல் நூலகங்கள் நூல் உலகிலே அதிக செல்வாக்குடன் விளங்குகின்றன. இந்தச் சுழல் நூலகங்கள் பிற மொழி நூல்களையும், சில பழைய நூல்களையும் வெளியிட்ட போதிலும், நெடுங்கதை, பயண நூல், வாழ்க்கை வரலாறு. நாடகம் ஆகிய நூல் வகைகளேயே சிறப்பாக வெளியிட்டு வருகின்றன. தம்முடைய வாடிக்கைக்காரர்களின் தேவைகளை நிறைவேற்ற அண்மையில் வெளியாகும் நூல்கள் யாவற்றையும் இந்தச் சுழல் நூலகங்கள் ஆயிரக்கணக்கிலே வாங்கி அடுக்கிவிடுகின்றன. இதனால், நூல் விற்பனை நிலையங்கள் நெடுங்கதை, சிறுகதை முதலிய நூல்களை வெளியிட்டவுடனே அவற்றிலே பெரும்பான்மையான படிகளை இச் சுழல் நூலகங்களுக்கே விற்றுவிடுகின்றன. இதன்காரனமாகத் தனிப்பட்ட முறையிலே நூல் வாங்குவோருக்கு நூல் கிடைப்பதில்லை. ஏனய ஐரோப்பிய நாட்டு நூல்கள் எல்லாம் வெறும் காகித மேலட்டையே கொண்டிருக்கும்பொழுது, பிரிட்டன் வெளியிடும் நூல்கள் மட்டும் கண்ணைக்கவரும் 'கலிகோத்' துணியட்டை கொண்டு காட்சியளிப்பதற்குக் காரணமாக அமைந்திருப்பன இச் சுழல் நூலகங்களே.
முதல் உலகப் பெரும் போர் முடிந்தபின்னர். பல விதமான புதிய முறையில் அமைந்த சுழல் நூலகங்-