42
முதுமைக் காலத் தொல்லை, பூச்சிகளினால் ஏற்படும்
அடிக்கடிஎழுத்துமப் பகுதியை ஆட்டி அகசைத்து. ஓடித்து நிமிர்த்தி வேலைகளைச் செய்வதால், அந்த ஏழு எலும்புகள் மூளைப்பகுதிக்குப் போகும் நரம்பை அழுத்தி அழுத்தி வலியை உருவாக்குகின்றது.
அந்த வலி நாளுக்கு நாள் அதிகம் ஆக ஆக, நமக்கு மயக்கம் ஏற்படுகின்றது. கை, கால்கள் மரத்துப் போவதைப் போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த நிலைகள் அதிகமானதற்குப் பிறகு தான் நமக்கு அதிகமாக கழுத்து வலிகள் உருவாகின்றன.
கழுத்து வலியால் மூளை நரம்புகள் பாதிக்கப்படும் என்பதையும், முதுகு வலியால் தண்டு வடம் என்ற முதுகு நடு எலும்பு பாதிக்கப்படுகிறது என்பதையும் நாம் நன்கு உணர்ந்து கொண்டு. உடனே மருத்துவர்களிடம் செல்ல வேண்டும்.
சிலர், கழுத்து. மூட்டு, முதுகு வலிகள் வரும் போது தற்குரிய வலி நீக்கும் தைலங்களைத் தடவித் தடவி சற்று நரம் நிம்மதி பெறுவார்கள். அல்லது அமிர்தாஞ்சனம் என்ற லைவலி தைலத்தைத் தடவி ஆறுதல் பெறுவார்கள்
இந்த வலி போக்கி தைலங்களால், தாற்காலிக வலி நீக்கங்கள் இருக்கலாமே ஒழிய, நிரந்தரமான வலி போக்கிகளாக இருக்காது. அதனால் தான். உடனே டாக்டரிடம் செல்லுங்கள் என்று கூறுகின்றோம்.
மூட்டு வலிகளுக்கும் இப்படியே தைலம் தேய்த்து கால்களை உருவிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். அதுவும் தற்காலிக வலி நீக்கமாகத் தான் அமையும்.
மூட்டு வலிக்குரிய மருந்து உடலுக்குள் செலுத்தும் மருந்தாகவே இருக்க வேண்டும். அப்போது தான், அந்த மருந்து இரத்தத்தில் கலந்து மூட்டுப் பகுதிகளில் உள்ள