உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும்


நாம் இன்றும் கோயிலுக்குப் போனால்.பாம்பு புற்று என்ற ஒன்றும் இருப்பதைப் பார்க்கிறோம். அந்தப் புற்றுகளிலே பாம்பு வாழ்வதாக எண்ணிக் கோழி முட்டைகளை அதற்குரிய உணவாகப் படைத்துவிட்டு வருகிறோம். நம் நாட்டு அம்மன் வழிபாடுகளிலே நாகாத்தம்மாள் என்றும் நாகவள்ளி என்றும் பெயரிட்டு அழைத்து, அந்தத் தேவதைகளை வணங்கி, திருவிழாக்களும் எடுத்துப் போற்றிக் கொண்டாடிடும் பழக்க வழக்கங்கள் இருப்பதைப் பார்த்து வருகிறோம். எனவே, நாகம் என்ற பாம்பு தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல.உலக மக்களுக்கும் ஒரு தெய்வ வழிபாட்டுச் சின்னமாக இன்றும் இருந்து வருகின்றது. நமது சைவ மதக் கடவுளான பரமசிவன் அந்தப் பாம்பை நல்ல பாம்பு என்று மக்களுக்கு உணர்த்த அதைத் தனது கழுத்திலே அணிந்து கொண்டிருப்பதை நாம் வழிபடுகிறோம். அதனால்தான், காலஞ் சென்ற சினிமா பாடலாசிரியரான கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கூட ஒரு பாட்டை எழுதும்போது, “பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு கருடா செளவுக்கிமா? என்று கேட்டதாகவும், அதற்குக் கருடன், ‘இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் செளவுக்கியமே’ என்று கருடன் பதில் சொன்னதாகவும்” எழுதியிருந்தார். வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் கூட ‘நாதர் முடிமேல் இருக்கும் நாகப் பாம்பே’ என்று பாடினார். முப்பெரும் கடவுள்களிலே ஒருவரான மகாவிஷ்ணு என்ற கடவுள், பாம்புகளின் ராஜாவான ஆதிசேஷன் என்ற பாம்புமீது படுத்து வாழ்வதாக தெய்வீகக் குறிப்பும் உள்ளது. பாம்பின் பெயராலேயே பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் என்ற ஒருவரும் நமது